|
'விடையிராதா
நீண்ட கேள்விகளால்
நிறைகிறது -
எதற்கெதற்காகவோ காத்திருக்கிற மனசு..
'நீண்ட பாலை நிலங்களில்
காய்ந்த புற்களை போல்
தொலைத்திட்ட ஆசைகள்
மரணத்தை மட்டும் மிச்சம் வைத்துக் கொண்டு
எல்லாவற்றிற்குமாகவும்; காத்திருக்கவே செய்கிறது.. ஆனால் முடியவில்லை
'வருடத்தில் பூக்கும்
ஒவ்வொரு நாட்களிலும்
பார்த்து வந்த குடும்பத்து முகங்கள், கேள்விகள், பதில்கள்
தொண்டையின் இடைவெளியில் -
சிக்கிக் கொண்ட பாரங்களாகவே கனக்கின்றன..
'எரிக்கும் வெயில்; குளிர்
பரபரப்பான வீதிகள், ஓய்வில்லா மனிதர்கள்
கண் அடைக்கும் நான்கு சுவர்களாலான அறை
எல்லாம் கடந்தும் -
நண்பர்களின் நினைவுகளில் வலிக்கும்; வலி
உயிருடன் எரிக்கிறது உடலையும், உள்ளத்தையும்
தீருமோ இந்த வலி???
அங்கே, வாழ்க்கையை
பெற்றோமா??? இழந்தோமா??? சொல்லத் தெரியவில்லை.
இப்போது புரிகின்றது கையாலாகாத்தனம், வாழ்வின் வெறுமை
என்னுடனிருந்தவர்கள் எங்கே??? எல்லாமும் எங்கே???
மரணம் வரும்நாள் மட்டுமே எனது வலிகள் விலகும்...
உண்மையைச் சொல்கிறேன்!!! நானும் அங்கே செத்திருக்க வேண்டும்...
**************************************
|